Sunday, November 22, 2009

ஆதி முதற் காலம் பூத்ததிங்கே
ஆஹா... ஆதி எனும் தாளம் வார்த்ததிங்கே
மோகமெலாம் தான் விடுத்து
மாமுனிகள் தவம் செய்து
ஞான கங்கை பெருகி வந்ததிங்கே

யாவரிங்கே கும்மிருட்டாய் குகைகள் செய்தார்
யாவரிங்கே கொம்புத்தேன் கூடுகள் செய்தார்
யாவரிங்கே கும்மிருட்டாய் குகைகள் செய்தார்
யாவரிங்கே கொம்புத்தேன் கூடுகள் கொய்தார்
யாவரிங்கே அடிக்கல் நாட்ட உரிமை படைத்தார்
யானை ஏறா மாமலையில் மௌனம் உடைத்தார்
நாம் வாழும் காடு நம் தாய் வீடு என்று
இசைக்கின்றதாரோ காற்றோ காட்டருவிகளோ

எந்த கைகள் அரணிக் கோல் கடைந்ததிங்கே
சிந்தனையில் அறிவென்னும் செந்தழல் தோன்ற
ஞான சூர்ய நெஞ்சிருக்கும் ஞானவான்கள் போல்
நூறு வகை பூக்களிலே சுடர்கள் எழுப்பும்
நாம் வாழும் காடு நம் தாய் வீடு என்று
இசைக்கின்றதாரோ காற்றோ காட்டருவிகளோ

No comments:

Post a Comment