அடி தோழி அடி தோழி.. அடை காக்கும் சிறு கோழி
மயில் முட்டை வாங்கி உனது கூட்டில் வெச்சேனே
அடை காக்கும் முட்டைக்குள்ளே உசுரை வெச்சேனே
கலர் கலரா கனவிருக்கு கண்ணுக்குள்ள
கவிதை ஒன்னு பூத்திருக்கு நெஞ்சுக்குள்ளே
அவர் எங்கே நானும் எங்கே ஆனால் இங்கே உள்ளம் பொங்குதடி கடல் போல
அவர் பெயரின் பலகை போல அவரும் கூட எட்டா உயரம் தான் மலை போல
சொல்லாத வார்த்தையோ என்நெஞ்சை முட்டுது
தொண்டைக்குள் முள்செடி யார் வந்து நட்டது
அடிநேஞ்சுக்குள்ளே ஆழக்குழி வெட்டி ஆசைகளை புதைக்கிறே நீ
நீ வந்து தோன்றிய பின்னே ஜன்னல் கம்பி கதைகள் பேசியதே.. பேசியதே..
பூ வாடும் ஓசை கேட்டும் வளையல் போடும் ஓசை கேட்கலையோ.. கேட்கலையோ
பிறக்காத கவிதையோ பேனாவை திருடுது
உன் நாவல் கண்டதும் உயிர் கொஞ்சம் வாடுது
நான் வணங்கும் சாமி நலங்கிள்ளி என்று பரீட்சை எழுதிவிட்டேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment